மெட்டி ஒலி,கோலங்கள்,வாணி ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் நீலிமா ராணி.தன்னுடைய நடிப்பாலும்,அழகாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.இதுமட்டுமின்றி நான் மகான் அல்ல,திமிரு,பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

Neelima Rani Quits From Aranmanai Kili Serial

இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடரில் ஒன்றான அரண்மனைக்கிளி தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடரில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

Neelima Rani Quits From Aranmanai Kili Serial

தற்போது இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது நான் சிறு வயதிலேயே நடிப்பதற்கு வந்துவிட்டேன் கேமராவிற்கு முன்னால் நிற்கும் மிகவும் சந்தோஷமான ஆளாக உணர்வேன்.எனது வாழ்க்கையில் ஏற்படவுள்ள சில முக்கிய மாற்றங்களுக்காக துர்காவை உங்களிடம் விட்டு செல்கிறேன்.நண்பர்கள்,ரசிகர்கள் என்று எப்படி வேண்டுமானாலும் உங்களை கூப்பிடலாம் நீங்கள் தான் என் பலம் என்னுடன் எப்போதும் துணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.