செல்லம்மா பாடலுக்கு நடனமாடி அசத்தும் நீலிமா ராணி !
By | Galatta | September 24, 2020 18:41 PM IST

மெட்டி ஒலி,கோலங்கள்,வாணி ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் நீலிமா ராணி.தன்னுடைய நடிப்பாலும்,அழகாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.இதுமட்டுமின்றி நான் மகான் அல்ல,திமிரு,பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடரில் ஒன்றான அரண்மனைக்கிளி தொடரில் நடித்து வந்தார்.இந்த தொடரில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.இந்த தொடரில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடர் இவர் விலகிய கொஞ்ச நாட்களிலேயே கைவிடப்பட்டது.
கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் அவ்வப்போது போட்டோக்களையும்,விடீயோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார்.இவர் கருப்பங்காட்டு வலசு என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் அந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது நீலிமாவின் புதிய நடன வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சிவகார்த்திகேயனின் சமீபத்திய ட்ரெண்டிங் பாடலான செல்லம்மா பாடலுக்கு நடனமாடும் இவரது வீடியோ இன்ஸ்டாகிராமில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.