ரசிகர்களை மகிழ்விப்பதில் முக்கிய கருவியாக இருந்து வருவது தொலைக்காட்சி.அப்படி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளும் மக்களை மகிழ்வித்து பெரிய வரவேற்பை பெற்று அசத்தி வரும்,தமிழில் அப்படி முன்னணி தொலைக்காட்சிகளாக பல தொலைக்காட்சிகள் உள்ளன.

பல வருடங்களாக மக்களை என்டேர்டைன் செய்து வரும் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்று ராஜ் டிவி.தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொலைக்காட்சியாக வளர்ந்தனர் ராஜ் டிவி.சில வருடங்களாக கொஞ்சம் டல் அடித்த ராஜ் டிவி மீண்டும் களத்தில் இறங்கியுள்ளனர்.

புதிய நிகழ்ச்சிகள்,புதிய சீரியல்கள் என்று சில மாதங்களுக்கு முன் தொடங்கி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தங்கள் வரவேற்பை நிறுவியுள்ளனர்.அப்படி ஒளிபரப்பை தொடங்கி பெரிய வரவேற்பை பெற்று வரும் தொடர் நீ வருவாய் என தொடர்.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் வினோத் குமார் மற்றும் யாழினி இருவருக்கும் தற்போது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இவர்கள் இருவரும் இந்த தொடரில் ஜோடியாக நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறியதற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.