இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை நயன்தாரா முதல் முறையாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக களமிறங்குகிறார்.

முன்னதாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தின் ரீமேக்காக தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து காட்ஃபாதர் திரைப்படத்தில் நடித்து வரும் நயன்தாரா பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து நடித்திருக்கும் GOLD திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 19ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

அடுத்ததாக ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக CONNECT திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை நயன்தாரா தொடர்ந்து தனது திரைப்பயணத்தில் 75வது திரைப்படமாக தயாராகும் புதிய படத்திலும் நடிக்கிறார். இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் விடுமுறையை கொண்டாட சில தினங்களுக்கு முன்பு பார்சிலோனா புறப்பட்டுச் சென்றனர்.

புதுமண தம்பதியினரான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் பார்சிலோனாவில் விடுமுறையை கொண்டாடி வரும் வேளையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் , நயன்தாரா உடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

 

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)