தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி சந்திர முகி, யாரடி நீ மோகினி, பில்லா போன்ற வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை  உருவாக்கியவர் நடிகை நயன்தாரா.

ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் தனது இரண்டாவது இன்னிங்ஸை ராஜா ராணி திரைப்படம் மூலம் கொடுத்து ரசிகர்களின் அமோக வரவேற்பை கொடுத்தார். அதன் பின் தொடர் வெற்றி படங்கள் மூலமும் உச்சபட்ச நடிகர்களுடன் நடித்ததிலும் கதாநாயகி மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்ததன் மூலமும் ரசிகர்களினால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழி படங்களிலும் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சாருக்கானுடனும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் சிவனுடன் காதலில் இருந்த நயன்தாரா கடந்த ஆண்டு திருமணம் செய்தார். அந்த தம்பதியனருக்கு இரண்டு ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தி கடந்த ஆண்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் விக்னேஷ் சிவன் தயாரித்து நயன்தாரா நடிப்பில் கனெக்ட்  திரைப்படம் வெளியானது. புத்தாண்டையொட்டி திரைப்படம் வந்ததையடுத்து சென்னை  எழும்பூர் ரயில் நிலைய சாலையோரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில்  அங்கு இருந்த குழந்தைகளுக்கும் ரசிகர்களுக்கும்  தன் கணவர் விக்னேஷ் சிவனுடன்  இணைந்து பரிசு பொருட்கள் வழங்கி தங்களது அன்பை பகிர்ந்துள்ளார். அங்கிருந்த அவரது ரசிகர்கள் நயன்தாரா விக்னேஷ் சிவனை சூழ்ந்து தங்கள் மகிழ்ச்சியினை வெளிக்காட்டினார். 

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சாலையோர மக்களுக்கு புத்தாண்டு பரிசுகளை வழங்கினார்கள் ❤️#Nayanthara @VigneshShivN @Rowdy_Pictures #WikkiNayan #VigneshShivan #NewYear2023 #Galatta pic.twitter.com/rO9NfEOpl8

— Galatta Media (@galattadotcom) January 3, 2023

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நயன்தாராவின் இந்த செயல் குறித்து ரசிகர்கள் நெகிழ்ந்து தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.