தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா,ரசிகர்களால் செல்லமாக லேடி சூப்பர்ஸ்டார் என்று நயன்தாரா அழைக்கப்படுவார்.கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா.பெரிய ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

இவரது படங்கள் முன்னணி ஹீரோ படங்களுக்கு நிகராக வசூலிலும் சாதனை படைக்கும்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து அசத்தி விட்டார் நயன்தாரா.அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து அசத்தி உள்ளார் நயன்தாரா.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வந்தனர்.இவர்களது திருமணம் கோலாகலமாக கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.இவர்களுக்கு வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்தனர்.

இன்று தீபாவளி திருநாளை பலரும் இந்தியா முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.இதனை முன்னிட்டு தலை தீபாவளி கொண்டாடும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்