தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகியாக திகழும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அடுத்ததாக மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் மளையாளத்தில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜுடன் இணைந்து கோல்ட் திரைப்படத்திலும் நடித்து வரும் நயன்தாரா தமிழில் அடுத்ததாக ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் கனெக்ட் படத்திலும் நடித்து வருகிறார். முன்னதாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான, ஹாரர் படமான மாயா திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் அடுத்த ஹாரர் திரைப்படமாக தயாராகிறது கனெக்ட் திரைப்படம்.

இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சமந்தாவுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள்  நடைபெற்று வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் பட டீசர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  வருகிற கோடை வெளியீடாக ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதியான இன்று நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அழகிய காதல் நட்சத்திரங்களான இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு காதலர்தின சர்ப்ரைஸாக பூங்கொத்து கொடுத்து நயன்தாரா அன்பை பகிர்ந்து கொள்ளும் வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகும் அந்த வீடியோ இதோ…