நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு தல அஜித்குமார் மற்றும் ஹச்.வினோத் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு சமீபத்தில் வலிமை என்று தலைப்பு வைக்கப்பட்டது. சில நாட்கள் முன்பு இந்த படத்தின் பூஜை நடந்தது. இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.

valimai

இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

nayanthara

பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா கைவசம் தர்பார், மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் உள்ளது. நவம்பர் 18-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க் சென்றுள்ளார். அங்கு தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அவரது மகள் குஷி கபூரை சந்தித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குஷி கபூர் நியூயார்க்கில் படித்து வருவதால், அவருடன் சில நாட்களாக போனி கபூரும் நியூயார்க்கில் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.