லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்து அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் நெற்றிக்கண். சீரியல் கில்லர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் கண் துறை படம் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

ரௌடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தை அவள் திரைப்படத்தின் இயக்குனர் மில்லின்ட் ராவ் இயக்குகிறார். இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்க தமிழ் சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான R.D.ராஜசேகர் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பார்வையற்ற பெண் கதாபாத்திரத்தில்  நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் நெற்றிக்கண் படத்தில் மிரட்டலான வில்லனாக நடிகர் அஜ்மல் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் மணிகண்டன் மற்றும் சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. முன்னதாக கவிஞர் கார்த்திக் நேத்தா வரிகளில் பாடகர் சிட் ஸ்ரீராம் குரலில் இதுவும் கடந்து போகும் என்னும் முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது பாடலாக நெற்றிக்கண் படத்தில் இருந்து விருவிருப்பான டைட்டில் டிராக் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.