தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் நெற்றிக்கண். சீரியல் கில்லர்- த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரௌடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தை அவள் திரைப்படத்தின் இயக்குனர் மில்லின்ட் ராவ் இயக்குகிறார். இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்க தமிழ் சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான R.D.ராஜசேகர் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் நெற்றிக்கண் படத்தில் மிரட்டலான வில்லனாக நடிகர் அஜ்மல் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் மணிகண்டன் மற்றும் சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் நெற்றிக்கண் படத்தில் இருந்து வெளியான இதுவும் கடந்து போகும் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இந்நிலையில் நெற்றிக்கண் திரைப்படத்தின் திரில்லிங்கான ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லரில் நெற்றிக்கண் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி நெற்றிக்கண் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக உள்ளது. விறுவிறுப்பான அந்த டிரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.