தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் நெற்றிக்கண். சீரியல் கில்லர் த்ரில்லர் திரைப்படமான நெற்றிக்கண் படம் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ்  தயாரித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தை இயக்குனர் மில்லின்ட் ராவ் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ப்ளைன்ட் எனும் கொரியன் திரைப்படத்தை தழுவி பார்வையற்ற பெண் கதாபாத்திரத்தில்  நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் நெற்றிக்கண் படத்தில் மிரட்டலான வில்லனாக நடிகர் அஜ்மல் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் மணிகண்டன் மற்றும் சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முன்னதாக கவிஞர் கார்த்திக் நேத்தா வரிகளில் பாடகர் சிட் ஸ்ரீராம் குரலில் இதுவும் கடந்து போகும் என்னும் முதல் பாடல் வீடியோ வெளியான நிலையில் தற்போது இந்த பாடலின் ரீப்ரைஸ் பாடல் வீடியோவும் வெளியாகியுள்ளது. அந்த அழகான வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.