பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

இதனை தொடர்ந்து RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயரிட்டுள்ளது.நயன்தாரா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இவற்றை தவிர RJ பாலாஜி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் கிரிக்கெட் கமென்டேடர் ஆகவும் பணியாற்றி வருகிறார்.இந்த ஐபிஎல் போட்டிகளில் இவரது கமெண்ட்ரியை பலரும் ரசித்து அது குறித்து ட்வீட் செய்து வருகின்றனர்.இந்நிலையில் 20 நாட்கள் RJ பாலாஜி கிரிக்கெட் கமெண்ட்ரிக்கு விடுமுறை அளிப்பதாக தெரிவித்தார்.பலரும் RJ பாலாஜியை மிஸ் செய்வோம் என்று பதிவிட்டு வந்தனர்.

இதற்கு பதிலளித்த RJ பாலாஜி 20 நாள் வேகமாக ஓடிவிடும் என்றும் , மூக்குத்தி அம்மன் படத்தின் வேலைகள் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.மூக்குத்தி அம்மன் படத்தை ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளனர் என்றும் நேரடியாக ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவியில் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் தகவல்கள் வந்தன.இந்நிலையில் RJ பாலாஜியின் டீவீட்டை வைத்து பார்க்கையில் இந்த படம் அதற்கும் முன் ஆயுத பூஜையை ஒட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.