தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அஸ்வின் சரவணன், நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்த மாயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். தமிழில் நல்ல வரவேற்ப்பை பெற்ற மாயா திரைப்படம் கன்னடத்தில் ஆகே என ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடிகை டாப்சி நடிப்பில் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளிவந்த கேம் ஓவர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அஸ்வின் சரவணன் இயக்கிய இறவாக்காலம் திரைப்படம் நிறைவடைந்து ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.

இதனிடையே அடுத்ததாக நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் புதிய ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகி வரும் கனெக்ட் திரைப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் கனெக்ட் படத்தில் சத்யராஜ் மற்றும் அனுபம் கெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் அஸ்வின் சரவணனுக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. தனது சக இணை எழுத்தாளரான காவியா ராம்குமாரை இயக்குனர் அஸ்வின் சரவணன் கரம் பிடித்துள்ளார். இயக்குனர் அஸ்வின் சரவணன் எழுத்தாளர் காவியா ராம்குமார் திருமணத்திற்கு  குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.