மாயா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து கேம் ஓவர் திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் அஸ்வின் சரவணன் தனக்கே உரித்தான பாணியில் வித்தியாசமான த்ரில்லர் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் அடுத்த ஹாரர் த்ரில்லர் படமாக நடிகை நயன்தாரா நடிப்பில் தயாராகியுள்ள கனெக்ட் படம் வருகிற டிசம்பர் 22-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இடைவேளை இல்லாத முழு நீள 99 நிமிட திரைப்படமாக வெளிவரும் கனெக்ட் திரைப்படம் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாராவுடன் சத்யராஜ், அனுப்பம் கெர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கனெக்ட் படத்தில் வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்க, மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில், கனெக்ட் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய இயக்குனர் அஸ்வின் சரவணன் தனது திரைப்பயண அனுபவங்கள் குறித்தும், கனெக்ட் திரைப்படம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

அந்த வகையில், “ஏன் உங்களது திரைப்படங்களில் ஆண்கள் கதாநாயகர்களாக முன்னிறுத்தி அபாயங்களை சந்திப்பவர்களாக இருக்காமல் எப்போதும் பெண்களே கதாநாயகிகளாக முன்னிறுத்தப்படுகிறார்கள்? இது தவறு என்று சொல்லவில்லை ஒட்டுமொத்தமாக உலக அளவில் ஹாரர் திரைப்படங்களில் பெண்கள் அபாயத்தில் இருப்பதாகவே இருக்கிறது ஏன்..? என கேட்கப்பட்டபோது,

“பெண்கள் எப்போதும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பெண் இரவில் தனியாக நடந்தால் தானாகவே நமக்கு ஒரு பயம் தோன்றுகிறது ஆனால் ஒரு ஆண் செல்லும்போது அந்த பயம் நமக்கு ஏற்படுவதில்லை. ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் அவன் சண்டையிட்டாவது சமாளித்துக் கொள்வான் என நினைக்கிறோம்.. FINAL GIRL என்று ஒரு TERM இருக்கிறது. SLASHER GENRE படங்களில் பெண் தான் கடைசியில் பிழைத்தவளாக இருப்பாள் அவள் தன்னுடைய பலம் என்ன எனத் தேடி கண்டுபிடித்து சண்டையிட்டு அந்தக் கில்லரையோ அல்லது வில்லனையோ தோற்கடிப்பாள். வழக்கமாக ஹீரோ தான் இவை அனைத்தையும் செய்வார். ஆனால் கிளாசிக்கலும் சரி மாடர்னிலும் சரி SLASHER GENREல் இந்த FINAL GIRL இன்னும் இருக்கிறது. ஹாலிவுட்டில் இது மிகவும் பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஆனால் இந்திய சினிமாவுக்கு கொஞ்சம் புதிது அவ்வளவு தான் என்னை பொருத்தவரைக்கும் இரவாக்காலம் திரைப்படம் ஒரு ஆண் சம்பந்தப்பட்டது தான்..” என இயக்குனர் அஸ்வின் சரவணன் தெரிவித்துள்ளார். அஸ்வின் சரவணனின் அந்த முழு பேட்டி இதோ…