இந்தியாவின் முன்னணி பாடகர்களில் மிகப்பெரும் ஜாம்பவானாக , கிட்டத்தட்ட 50 ஆண்டுகளளாக இருந்து வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.தனது காந்தக்குரலால் பல இதயங்களை மயக்கும் மகிமை கொண்டவர்.15 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார் ஒரே நாளில் 19 தமிழ் பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். மேலும் 40 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன்,இளையராஜா போன்றவர்கள் தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான்,அனிருத்,இமான் என்று தற்போதைய ஜெனரேஷன் இசையமைப்பாளர்கள் வரை அனைவருடனும் பணியாற்றியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.மேலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார் எஸ்.பி.பி,சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.ஆனால் நேற்று திடிரென்று இவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் எஸ்.பி.பி காலமானார் என்ற செய்தி கேள்விப்பட்டு பல ரசிகர்கள்,பிரபலங்கள் என்று இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது.எஸ்.பி.பி குறித்த தங்கள் நினைவுகளையும்,இரங்கல்களையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.SPB-யின் பண்ணைவீட்டில் அவரது இறுதி சடங்குகள் அரசு மரியாதையோடு நடைபெற்றது.அவரது பார்ம் ஹவுஸில் தமிழக அரசு அறிவித்தபடி 72 குண்டுகள் முழங்க காவல்துறையின் மரியாதையுடன் எஸ்.பி.பி-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி-யின் மறைவு குறித்து நடிகை நயன்தாரா தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் ,தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு. எஸ்பி பாலசுப்ரமணியம் சாருடைய குரல், நம்முடைய எல்லா காலங்களுக்கும், காரணங்களும் பொருந்தி இருக்கும்.

நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது… ஆயினும் உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும், உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது. எங்கள் வாழ்வில் உங்களின் ஆளுமை அப்படி. நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம் இல்லாமல் பிரியா விடை கொடுக்கிறோம். பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும். உங்களை பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உங்கள் திரை உலக சகாக்களுக்கும், நண்பர்களுக்கும், உங்கள் திரை உலக சகாக்களுக்கும், உலகெங்கும் பரவி இருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களிக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது. ” என்று குறிப்பிட்டுள்ளார்.