கொரோனா பிடியிலிருந்து எப்போதுதான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என மக்கள் வாடியுள்ளனர். இந்நிலையில் இந்திய அரசாங்கம் அறிவித்த ஊரடங்கு சட்டத்தால் பலர் வேலையின்றி பாதிப்புக்கு உள்ளாகினர். திரைத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

Nayanthara

இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் படங்கள்,சீரியல்கள்,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த இக்கட்டான நிலையில் FEFSI தொழிலாளர்களுக்கு உதவுமாறு அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி திருத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர். 

Nayanthara

தற்போது லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா FEFSI தொழிலாளர்களுக்காக ரூ.20 லட்சம் வழங்கியுள்ளார். நடிகை நயன்தாரா கைவசம் அண்ணாத்த, மூக்குத்தி அம்மன், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உள்ளது.