தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா,ரசிகர்களால் செல்லமாக லேடி சூப்பர்ஸ்டார் என்று நயன்தாரா அழைக்கப்படுவார்.கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா.பெரிய ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

இவரது படங்கள் முன்னணி ஹீரோ படங்களுக்கு நிகராக வசூலிலும் சாதனை படைக்கும்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து அசத்தி விட்டார் நயன்தாரா.அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து அசத்தி உள்ளார் நயன்தாரா.

இவர் அம்மனாக நடித்த மூக்குத்தி அம்மன்,நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்கள் OTT-யில் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது அண்ணாத்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.இதனை தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல்,லயன்,காட்பாதர்,அட்லீ-ஷாருக்கான் படம்,அல்போன்ஸ் புத்ரன் படம் உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தார் நயன்தாரா.

நயன்தாரா இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இவர் நடித்துவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் படத்தின் இயக்குனரும் தனது காதலருமான விக்னேஷ் சிவன்,நாயகன் விஜய்சேதுபதி மற்றும் நடிகை சமந்தா உள்ளிட்டோருடன் கொண்டாடியுள்ளார்.இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.