நடிகர் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தொடர்ந்து தனக்கே உரித்தான ஸ்டைலில் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட அழகான படங்களை கொடுத்து தமிழ் திரை உலகில் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இந்த வரிசையில் அடுத்ததாக புதிய படத்தில் அஜித் குமாருடன் விக்னேஷ் சிவன் இணைகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடிக்கும் AK62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாராவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

நயன்தாரா முன்னதாக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜுடன் இணைந்து நடித்த GOLD திரைப்படம் விரைவில் ரிலீசாக தயாராகிவரும் நிலையில், தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து நடித்த GODFATHER திரைப்படம் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அடுத்ததாக முதல்முறை பாலிவுட்டில் களமிறங்கும் நயன்தாரா, இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் படத்தில் நடிக்கிறார்.

மேலும் மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் எனும் ஹாரர் த்ரில்லர் படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது 37வது பிறந்தநாளை நயன்தாராவுடன் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை விக்னேஷ் அவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

 

 

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)