தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் ஐரா. இத்திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் சர்ஜுன்.KM.

முன்னதாக சத்தியராஜ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்து வெளிவந்த எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சர்ஜுன்.KM. சமீபத்தில் நெட்பிளிக்ஸ்-ல் வெளியான நவரசா வெப்சீரிஸில் அதர்வா, கிஷோர், அஞ்சலி இணைந்து நடித்த துணிந்தப் பின் எபிசோடை இயக்கினார்.

அடுத்ததாக இயக்குனர் சர்ஜுன்.KM இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கலையரசன் நடிக்கிறார் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை மிர்ணா நடிக்கிறார்.  ஒரு நாளில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட காதல் கதையாக உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 20 முதல் 25 நாட்களுக்குள் நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

SKLS கேலக்ஸி மால் மற்றும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய கேர்ள் கானா சிவாத்மிகா இசையமைக்கிறார். இன்று இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் புகைப்படங்களும்  வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படங்கள் இதோ...