சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர்களில் ஒன்று நாயகி.600 எபிசோடுகளை தாண்டி சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றானது நாயகி.விகடன் டெலிவிஸ்டாஸ் இந்த சீரியலை தயாரித்துள்ளனர்.திலீப் ராயன் இந்த தொடரின் ஹீரோவாக நடித்து வந்தார்.

முதலில் விஜயலக்ஷ்மி இந்த சீரியலின் நாயகியாக நடித்துவந்தார்.சில காரணங்களால் வித்யா பிரதீப் இந்த தொடரின் நாயகியாக பின்னர் வந்தார்.அம்பிகா,பாப்ரி கோஷ் என்று ஏராளமான நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த தொடருக்கென்றே தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது.சன் டிவியில் சில காரணங்களால் சில தொடர்கள் கைவிடப்பட்டது அதில் நாயகி தொடரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரின் இரண்டாம் சீசன் அடுத்ததாக ஒளிபரப்பப்பட்டது.இதில் ஹீரோயினாக பிரபல தொகுப்பாளினி நக்ஷத்திரா நடித்திருந்தார்.ஹீரோவாக தெய்வமகள் தொடரில் ஹீரோவாக நடித்த கிருஷ்ணா நடித்தார்.முதல் சீசனில் நடித்த அம்பிகா,பாப்ரி கோஷ் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் இந்த சீசனிலும் நடிக்கின்றனர்.இந்த சீஸனும் விரைவில் நிறைவுக்கு வந்தது.

இந்த சீரியலில் வித்யா பிரதீப் நடித்து வந்த நாயகி சீசனில் நடித்து அசத்தி வந்த முக்கிய நபர்களில் ஒருவர் பிரதீபா முத்து.அணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருந்தார் பிரதீபா.இவருக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

nayagi serial fame pradeepa muthu gets married picture turns viral