தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஜீ தமிழின் முக்கிய தொடர்களில் ஒன்று என்றென்றும் புன்னகை.நக்ஷத்திரா ஸ்ரீனிவாஸ்,தீபக் குமார்,நிதின் ஐயர்,கவிதா உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடரை பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி தயாரித்து வருகிறார்.ரசிகர்களின் ஆதரவுடன் இந்த தொடர் 400 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது இந்த தொடரில் முக்கிய வேடத்தில் பிரபல சீரியல் நடிகை இணைந்துள்ளார்.

நாயகி தொடரில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சுஷ்மா நாயர்
,இந்த தொடரில் மிகமுக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து இவரது புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

nayagi fame sushma nair joins the cast of endrendrum punnagai serial