1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடராக இந்த தொடர் இருந்தது.இந்த தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்தே இந்த தொடரை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வந்தனர்.

இந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடிக்கிறார்.சித்தி தொடரை போலவே இந்த தொடரிலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.பொன்வண்ணன்,ஷில்பா,மஹாலக்ஷ்மி,நிகிலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர்.சித்தி 2 தொடரின் ஒளிபரப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த தொடுரின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து இந்த தொடரின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரின் ஷூட்டிங் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இந்த தொடரின் ஹீரோயின் ஹீரோயின் ப்ரீத்தி ஷர்மா சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.இந்த தொடரின் ஷூட்டிங் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது என்று சிலரால் இந்த சீரியல் ஷூட்டிங்கில் உடல்நிலை காரணமாக கலந்துகொள்ள முடியவில்லை ஆதலால் அவர்களை மாற்றிவிட்டு சீரியல் ஷூட்டிங் நடைபெறுகிறது என்று ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார்.பொன்வண்ணன் கேரக்டரில் நிழல்கள் ரவி நடிக்கவுள்ளார்,நிகிலா ராவ் நடித்து  கதாபாத்திரத்தில் காயத்ரி யுவராஜ் நடிக்கிறார்,ஷில்பா நடித்து வந்த கதாபாத்திரத்தில் ஜெயலட்சுமி நடிக்கிறார் என்பது ராதிகா பதிவிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த தொடரின் புதிய எபிசோடுகள் வரும் ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று சன் டிவி அறிவித்தனர்.இதனை ஒரு ப்ரோமோ மூலம் அறிவித்த நிலையில் அந்த ப்ரோமோவில் நாயகி தொடரில் பிரபலமான மீரா கிருஷ்ணன் புதிதாக தென்பட்டார்.இவர் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில் ,மீரா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தொடரில் நடிப்பது குறித்து பதிவிட்டுள்ளார்.முக்கிய வில்லியான மல்லிகா கேரக்டரில் நடிக்கவுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.இவரை ராதிகாவுக்கு எதிராக வில்லியாக பார்க்க ஆர்வமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.