தமிழ் திரையுலகின் நவரச நாயகனாக திகழ்பவர் நடிகர் கார்த்திக். 13 ஆண்டுகளுக்குப் பின்பு, தீ இவன் என்ற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். கடைசியாக கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கலக்கற சந்துரு படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். 

karthick

டி.எம்.ஜெயமுருகன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் கொங்கு மக்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் என கூறப்படுகிறது. மனிதன் சினி ஆர்ட்ஸ் வழங்கும் இந்த படத்தை நிர்மலா தேவி ஜெயராமன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அலிமிர்ஜா பின்னணி இசை பணிகளை மேற்கொள்கிறார். 

theeivan

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்குகிறது. மௌனராகம், மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்கள் இன்று வரை ரசிகர்கள் விரும்பும் படமாக இருக்கிறது. அதே போல் இந்த தீ இவன் படம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.