நவரசங்களின் ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் 9 எபிசோடுகளில் உருவாகியிருக்கும் நவரச ஆன்தாலஜி வெப் சீரிஸில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும்  கிட்டார் கம்பி மேலே நின்று, அரவிந்த் சுவாமி இயக்கத்தில் நடிகை ரித்திகா, ரமேஷ் திலக், பசங்க ஸ்ரீராம் நடிக்கும் ரௌத்திரம், இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் யோகிபாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு நடிக்கும் சம்மர் ஆஃப் 92 (SUMMER OF 92) தயாராகியுள்ளது.

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி, பிரசன்னா நடிக்கும் ப்ராஜெக்ட் அக்னி , இயக்குனர் வசந்த் சாய் இயக்கத்தில் நடிகைகள் அதிதி பாலன், ரோகினி மற்றும் நடிகர் டெல்லி கணேஷ் நடித்திருக்கும் பாயாசம், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பாபி சிம்ஹா, சமந்தா ஆகியோர் நடிக்கும் பீஸ் எபிசோடை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, அசோக் செல்வன் நடிப்பில் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் எதிரி எனும் எபிசோடு உருவாகியுள்ளது. நடிகர் சித்தார்த், நடிகை பார்வதி இணைந்து நடிக்கும் இன்மை எபிசோடை இயக்குனர் ராஜேந்திர பிரசாத் இயக்கியுள்ளார். இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாக்ஷனின் க்யூப் சினிமா டெக்னாலஜிஸ் இணைந்து தயாரித்துள்ள ஆன்தாலஜி வெப்சீரிஸ் நவரசா. 

நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள இந்த நவரசா வெப்சீரிஸின் முதல் பாடலாக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும்  கிட்டார் கம்பி மேலே நின்று எபிசோடில் இருந்து தூரிகா என்னும் பாடல் நேற்று வெளியானது. அந்தவகையில் நடிகர் அதர்வா, அஞ்சலி, கிஷோர் இணைந்து நடித்திருக்கும் துணிந்த பின் எபிசோடில் இருந்து ஒசர பறந்து வா என்னும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மனதை உலுக்கும் இந்த எமோஷனல் பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.