இயக்குனர் மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள Anthology வெப் சீரிஸ் நவரசா. Netflix தளத்தில் விரைவில் வெளியாகவுள்ள இந்த தொடர் கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கும்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள்,இயக்குனர்கள் மற்றும் Technician-கள் ஒன்றிணைந்து இந்த தொடரை உருவாக்கியுள்ளனர்.இந்த தொடர் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நவரசாவில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கியுள்ள பகுதியில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார்,பிரக்யா மார்ட்டின் ஹீரோயினாக நடித்துள்ளார்.காதலை மையப்படுத்தியுள்ள இந்த பகுதிக்கு கிட்டார் கம்பி மேலே நின்று என்று பெயரிட்டுள்ளனர்.கார்த்திக் இந்த பகுதிக்கு இசையமைத்துள்ளார்.இவரது பாடல்கள் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்து வந்தன.

இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கிட்டார் கம்பி மேலே நின்று பகுதியின் பாடல்கள் அடங்கிய சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்,மேலும் சில புது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.