திரையுலகில் சிறந்த நடிகராகவும் சீரான ஒளிப்பதிவாளராகவும் திகழ்பவர் நட்டி நட்ராஜ். பல திரைப்படங்களில் இவர் நடித்தாலும், இவர் நடித்த சதுரங்க வேட்டை திரைப்படம் இவரை புகழின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது. கடந்த ஆண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த ஆண்டு காட்ஃபாதர், வால்டர் என தொடர்ச்சியாக இவரது படங்கள் வெளியானது. 

Natty Natraj Shares Corona Meme Video In Twitter

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் மக்கள் தங்கள் பணிக்கு திரும்பாமல் அவதி படுகின்றனர். திரைப்பிரபலங்களும் படப்பிடிப்பிற்கு செல்ல இயலாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளனர். ரசிகர்களுடன் லைவ்வில் தோன்றியும், அவர்கள் பணிபுரிந்த படங்களின் அனுபவம் குறித்தும் பதிவு செய்து வருகின்றனர். 

Natty Natraj Shares Corona Meme Video In Twitter

இந்நிலையில் வால்டர் திரைப்படத்தில் நட்டி நடித்த காட்சியை கொண்டு மீம்ஸ் உருவாக்கியுள்ளனர் ரசிகர்கள். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நட்டி. கொரோனாவை வைத்து கிளம்பும் மீம்ஸ் அனைத்தும் வைரலாகி வருகிறது.