திரையுலகில் சிறந்த நடிகராகவும் சீரான ஒளிப்பதிவாளராகவும் திகழ்பவர் நட்டி நட்ராஜ். பல திரைப்படங்களில் இவர் நடித்தாலும், சதுரங்க வேட்டை திரைப்படம் இவரை புகழின் உச்சத்தில் நிறுத்தியது. கடந்த ஆண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த ஆண்டு காட்ஃபாதர், வால்டர் என தொடர்ச்சியாக இவரது படங்கள் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் நடிகர் நட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் சினிமாவில் இருக்கும் குரூபிசம் குறித்து பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில் தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க???? என பதிவு செய்துள்ளார். நட்டியின் இந்த பதிவால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர் திரை ரசிகர்கள். தமிழ் சினிமாவிலும் இந்த நிலைமையா என்று கமெண்ட் செய்தனர். 

லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நட்டி, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதும், நாட்டு நடப்பு பற்றி ட்வீட் செய்தும் வருகிறார். இவரது பதிவிடும் ட்வீட்டுகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் கைலாசா கரன்சி குறித்து பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த கைலாசா கரன்சி எப்படி இருக்கும் ? ஐயம் வெயிட்டிங்... என பதிவு செய்துள்ளார். 

நாட்டில் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் நித்தியானந்தா. இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து நடந்த ஆய்விலும் இந்திய அதிகாரிகள் குறிப்பிடும் வகையில் எதையும் கண்டறியவில்லை. 

ஓரு ஆண்டுக்கு மேலாக அதிகாரிகள் நித்தியானந்தாவைத் தேடி வரும் நிலையில், கைலாசா நாடு குறித்து அறிவிப்புகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த சூழலில் இப்போது கைலாசாவின் கரண்சி தயார் எனக் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கொரோனாவால் மக்கள் அவதி படும் இந்த நிலையில் இதெல்லாம் தேவையா ? என்று கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.