இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நட்டி என்கிற நடராஜன் அவர்கள் தற்போது தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக, கதாநாயகன், வில்லன் மற்றும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

நாளை, மிளகா, சதுரங்க வேட்டை, நம்ம வீட்டு பிள்ளை, வால்டர் உள்ளிட்ட படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நட்டி, கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான கர்ணன் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். தொடர்ந்து நட்டி நடிப்பில் சம்பவம், இன்ஃபினிட்டி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் நட்டி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வெப். இயக்குனர் ஹரூன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரில்லர் படமான வெப் திரைப்படத்தில் காளி & இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படங்களில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடிக்க, மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் V.M.முனிவேலன் தயாரித்துள்ள வெப் படத்திற்கு கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் வெப் திரைப்படத்தின் விறுவிறுப்பான டீசர் சற்று முன்பு வெளியானது. அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.