ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கடந்த 2019-ல் வெளியாகி வெற்றிநடை போட்ட திரைப்படம் நட்பே துணை.ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார்.இந்த படத்தில் அனகா ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார்.

மலையாளத்தில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துவந்த இவர்,நட்பே துணை படத்தில் நடித்து தமிழக இளைஞர்களின் கனவுகன்னியாக வெகு விரைவில் உருவெடுத்து விட்டார்.கேரளா சாங்கில் இவரை ரசிக்காத ரசிகர்கள் எவரும் இல்லை.இதனை தொடர்ந்து தெலுங்கில் குணா 369 படத்தின் மூலம் தெலுங்கிலும் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள டிக்கிலோனா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் அனகா.இந்த படத்தின் ட்ரைலர் ரிலீசாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இன்னும் சில படங்களில் கம்மிட்டாகி உள்ளார் என்றும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நட்பே துணை பட நாயகி அனகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நடன வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த நடன வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.வைரலாக பரவி வரும் இந்த டான்ஸ் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by Anagha (@officialanagha)