உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. 

அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பேச்சாக தான் உள்ளது. 11 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்த நூற்றாண்டில், மனித குலத்துக்கு பெரிய சவாலாக இந்த வைரஸ் இருக்கிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. 

இந்த வைரஸுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், பெரிய அச்சுறுத்தலை இந்த வைரஸ் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க லாக்டவுன் பிறபிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். பின்னர், லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மூடப்பட்ட தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்களும் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிறுத்தப்பட்ட சில படங்களின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகின்றன. அதில் ஒன்று நானி, ரிது வர்மா நடிக்கும் தெலுங்கு படமான டக் ஜகதீஸ். இதன் ஷூட்டிங் கடந்த 7 ஆம் தேதி தொடங்கி ஐதராபாத்தில் நடந்து வந்தது. ரொமான்டிக் கதையை கொண்ட இந்தப் படத்தை, சிவ நிர்வாணா இயக்குகிறார். சாஹு கரபடி, ஹரிஷ் பெட்டி தயாரிக்கின்றனர்.

இதில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெகபதி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர். எஸ்.எஸ். தமன் இசை அமைக்கிறார். இந்நிலையில், இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தொழில்நட்ப கலைஞர் ஒருவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர் சோதனை செய்து பார்த்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் இந்த படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து படப்பிடிப்பில் கலந்துகொண்ட, ஹீரோ நானி, நடிகை ரிது வர்மா உள்பட அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். அதில் சிலர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இது, தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.