சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.கொரோனா காரணமாக இவர் நடித்த வி மற்றும் டக் ஜெகதீஷ் திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இவர் நடித்த Shyam Singha Roy படம் கிறிஸ்த்துமஸை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அடுத்ததாக நஸ்ரியாவுடன் இணைந்து Ante Sundaraniki என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் நானி.

Shyam Singha Roy படத்தினை Rahul Sanrityan இயக்கியுள்ளார்.இந்த படத்தில் நானி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.சாய் பல்லவி,க்ரிதி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டின் இந்த படத்தின் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார்.

நிஹாரிகா என்டேர்டைன்மெண்ட்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்