சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.இவர் நடித்த ஷ்யாம் சிங்கா ராய்,Ante Sundaraniki படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை அடுத்து நானி அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் தயாராகும் தசரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Sri Lakshmi Venkateswara Cinemas இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இந்த படத்தின் நீண்ட மற்றும் முக்கியகட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது என ஒரு புது போஸ்டருடன் ரசிகர்களுக்கு படக்குழுவினர் அப்டேட் கொடுத்துள்ளனர்.படத்தின் அடுத்தகட்ட அப்டேட்களை எதிர்நோக்கி ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.