சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.இவர் நடிப்பில் கடந்த 2019-ல் வெளியான ஜெர்சி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இவர் நடித்த கேங்லீடர் படமும் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து நானி Tuck ஜெகதீஷ் படத்தில் நடித்து வருகிறார்.இவரது 25ஆவது படமான வி படத்தை Mohan Krishna Indraganti இயக்கியிருந்தார்.இந்த படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹயாத்ரி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிதந்திருந்தனர்.

அமித் திரிவேதி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.நானி நடித்துள்ள வி படம் அமேசான் ப்ரைமில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி,ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.நானி முதல்முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் ,இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இதனை அடுத்து டக் ஜெகதீஷ் படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போனது,கொரோனா பாதிப்பு குறைந்து அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங்கை அக்டோபர் மாதம் தொடங்கினார் நானி.இவர் நடிப்பில் உருவாகவுள்ள நானி 28 படம் குறித்த அறிவிப்பு தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை Mental Madhilo,Brochevarevarura உள்ளிட்ட படங்களை இயக்கிய விவேக் ஆத்ரேயா இயக்குகிறார்.இந்த படத்தின் நஸ்ரியா ஹீரோயினாக நடிக்கிறார்.இது இவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது நானி-நஸ்ரியா படத்தின் டைட்டிலை படக்குழுவினர் ஒரு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

AnteSundaraniki என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.விவேக் சாகர் இந்த படத்திற்கு இசையமைக்க,நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.2021 இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.