சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று நந்தினி.சுந்தர் சி தயாரித்து கதை எழுதிய இந்த தொடரை ராஜ் கபூர் இயக்கியிருந்தார்.இரண்டு வருடங்கள் வெற்றிகரமாக ஓடிய இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த சீரியலின் ஓப்பனிங் தீம் பாடலை ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார் இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நித்யா ராம்,மாளவிகா வேல்ஸ்,ராகுல் உள்ளிட்டோர் இந்த சீரியலின் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.குஷ்பூ,விஜயகுமார்,ரியாஸ் கான்,காயத்ரி ஜெயராம்,ஸ்ரேயா அஞ்சன்,சண்முகராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த தொடர் TRP ரேட்டிங்கிலும் சாதனை புடைத்திருந்தது.

மேலும் பல மொழிகளில் இந்த தொடர் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்த தொடரில் நடித்து வந்த நித்யா ராம்,மாளவிகா வேல்ஸ் இருவரும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி, பெரிய ரசிகர் பட்டாளத்தையே பெற்றிருந்தனர்.இருவரையும் ஹீரோயின்களாக பார்க்கவேண்டும் என்று பல ரசிகர்களும் தங்கள் ஆசையை அவர்களிடம் தெரிவித்திருந்தனர்.

கொரோனா காரணமாக பலரும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வந்தனர்.பல பிரபலங்களும் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது என்று ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தனர்.பலரும் தங்கள் நடன திறமை உள்ளிட்டவற்றை ரசிகர்களுக்கு காண்பித்து வந்தனர்.தற்போது நந்தினி சீரியலின் ஒரு ஹீரோயினான மாளவிகா வேல்ஸ் தனது நடன வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Moh Moh Ke Dhaage🧚🧚🧚

A post shared by Malavika Wales (@malavikha_wales) on