பிரபல மாடலாக இருந்து மலையாளத்தில் Ponnambili என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் ராகுல் ரவி.துல்கர் சல்மான் நடித்த Jomonte Suvisheshangal உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறப்பு தோட்டங்களிலும் நடித்து அசதியுள்ளார் ராகுல்.மேலும் சில திரைப்படங்களிலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார் ராகுல்.சன் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று நந்தினி.ராகுல் ரவி இந்த தொடரின் ஹீரோவாக நடித்திருந்தார்.விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து தனது ஒளிபரப்பை நிறுத்தியது.என்றாலும் இந்த தொடருக்கும் இந்த தொடரில் நடித்த நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

ராகுல் இந்த தொடரில் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.இந்த தொடர் நிறைவடைந்த பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் தொடரின் நாயகனாக நடித்து வந்தார்.சில காரணங்களால் இந்த தொடர் நிறுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது தான் பிரபல மாடலும்,நடிகையுமான லக்ஷ்மி எஸ் நாயரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இவருக்கு ரசிகர்களும்,பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

A post shared by Rahul Ravi (@rahul.ravi_)