கடந்த 2002-ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நந்தா. புன்னகை பூவே, கோடம்பாக்கம், ஈரம், ஆனந்தபுரத்து வீடு என பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான வானம் கொட்டட்டும் படத்திலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Nanda Supplies Rice And Groceries In His Hometown
 
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்காக நடிகர், நடிகைகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

Nanda Supplies Rice And Groceries In His Hometown

இந்நிலையில் நடிகர் நந்தா, கோவை அருகே உள்ள தனது சொந்த ஊரான சென்றம்பாளையம் கிராமத்தில் உள்ள 250 குடும்பங்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார். நந்தாவின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு அந்த கிராமத்து மக்கள் நன்றி கூறியுள்ளனர்.