இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் நம்ம வீட்டு பிள்ளை. இதில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, நட்டி, சமுத்திரகணி ஆகியோர் நடித்திருந்தனர். படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு ஃபிரம் முழுக்க நம்ம வீட்டு பிள்ளையாக விளங்கினார் சிவகார்த்திகேயன்.  அரும்பொன் எனும் பாத்திரத்தில் துளசியின் அண்ணனாகவும், மாங்கணியின் மண்ணனாகவும் தோன்றி அசத்தியிருந்தார் SK.

nammaveetupillai

sivakarthikeyan

sivakarthikeyan

அன்பு நிறைந்த அண்ணன்-தங்கை பாசம் தான் படத்தின் மூலக்கதை. பாரதிராஜாவின் குடும்பத்தை சுற்றி வருகிறது கதை. வாழ்க்கையில் அதிகமான இன்பத்தை தருவதும் சொந்தம் தான், துன்பத்தில் தள்ளுவதும் சொந்தம் தான் எனும் முடிச்சை ஆணிவேறாக வைத்து அழகாக கோர்த்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். பந்தங்களின் அருமையை பந்தக்காலாக வைத்து செதுக்கியது பிரமாதம். இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார்.

aishwaryarajesh

nammaveetupillai

தற்போது படத்திலிருந்து உன் கூடவே பொறக்கணும் பாடல் வீடியோ வெளியானது. சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் வரிகளை ஜி.கே.பி எழுதியுள்ளார்.