நம்ம வீட்டு பிள்ளை பட பாடல் படைத்த கலக்கல் சாதனை !
By Aravind Selvam | Galatta | July 15, 2021 11:25 AM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் செம ஹிட் அடித்திருந்தன.மேலும் இந்த படம் TRP ரேட்டிங்களிலும் புதிய சாதனைகளை படைத்தது.2019-ல் அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாக நம்ம வீட்டு பிள்ளை படம் இருந்தது.இந்த படத்தின் பாடல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பல சாதனைகளையும் படைத்துள்ளது.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய காந்தகண்ணழகி பாடலின் வீடியோ 130க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
TRP-யிலும் பட்டையை கிளப்பிய இந்த படம் மக்கள் மனம் கவர்ந்த படமாக உருவெடுத்துள்ளது.தற்போது இந்த படத்தின் எமோஷனலான உன் கூடவே பொறக்கணும் பாடல் வீடியோ 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.இது குறித்து இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
GLORIOUS 70MILLION+ VIEWS FOR#UNKOODAVEPORAKKANUM SONG FROM#NAMMAVEETTUPILLAI#DIMMANMUSICAL
Sung by Sid Sriram
Lyric by GKB
Praise God!https://t.co/cOkqf4kgXx— D.IMMAN (@immancomposer) July 14, 2021