கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வழக்கம் போல் இந்த சீசனிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் கலகலப்பாகவும் கண்ணீர் கதைகளோடும் நிறைவடைந்துள்ளது.

பிக் பாஸ்-ன் முதல் வாரத்தில் கடந்து வந்த பாதை சுற்று நடைபெற ஒவ்வொரு போட்டியாளர்களும் அவர்கள் வாழ்வின் மிக கடினமான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடும் நெகிழ்ந்தது. நமிதா மாரிமுத்து அவரது வாழ்க்கையில் நடந்த மிகவும் கசப்பான கொடுமைகள் நிறைந்த தனது கடந்து வந்த பாதையை கண்ணீரோடு பகிர்ந்துகொள்ள பிக்பாஸ் வீடும் அதை காணும் ரசிகர்களும் கண்கலங்கினர்.

இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறியதாக தகவல்கள் வெளியாகின. பிக்பாஸ் வரலாற்றில் முதல் திருநங்கை போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நமிதா மாரிமுத்து தற்போது பிக்பாஸ்-ல் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

பிக் பாஸ் வீட்டிலும் காணும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நமிதா மாரிமுத்து கட்டாயம் இந்த சீசனில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத சில மருத்துவ காரணங்களுக்காக நமீதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிகிறது. இன்று வெளியான ப்ரோமோ வீடியோக்களிலும் நமிதா மாரிமுத்து இல்லாதது இவற்றை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.