பாலிவுட் சூப்பர்ஸ்டார் அந்த நடிகருமான ஆமிர் கான் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் லால் சிங் சத்தா. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்து கடந்த 1994ஆம் ஆண்டு வெளிவந்த ஃபாரஸ்ட் கம்ப் (FORREST GUMP) திரைப்படத்தின் ரீமேக்காக லால் சிங் சத்தா தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆமீர் கானின் தயாரிப்பு நிறுவனமான ஆமிர்கான் புரொடக்ஷன்ஸ் மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் லால் சிங் சத்தா திரைப்படத்தை இயக்குனர் அட்வைட் சந்தன் இயக்குகிறார். இதன் ஹிந்தி திரைக்கதையை ஹேராம் , ரன் படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகரான அதுல் குல்கர்னி எழுதுகிறார்.  பாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரான ப்ரீத்தம் இசையமைக்கிறார்.

நடிகர் ஆமீர் கான் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகை கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்த நிலையில், சில காரணங்களால் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யா இணைந்திருக்கிறார். 

மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் இருவரும் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் விதமாக தற்போது புதிய புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் உடையில் நடிகர் ஆமிர் கான் & நாக சைதன்யா இருக்கும் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இத்திரைப்படத்தில் நடிகர் ஆமீர் கானின் இளவயது காட்சிகளை படமாக்குவதற்காக ஆமீர்கான் இருபது கிலோ (20kg) வரை எடையைக் குறைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இத்திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.