2009-ல் நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் குணச்சித்திர நடிகர் கோபால்.இத்தனை வருடங்களில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் தனது வித்தியாசமான கதாபாத்திரங்களால் ரசிகர்களின் இதயங்களில் இடம்பெற்றிருந்தவர்.

Nadodigal Actor Gopal Passes Away Heart Attack

இதனை தொடர்ந்து போராளி,தொண்டன்,ரஜினி முருகன்,சீமராஜா,கிடாரி,நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.கடைசியாக சமீபத்தில் வெளியான நாடோடிகள் 2 படத்தில் நடித்திருந்தார்.ஈரோடு மாவட்டம் குப்ப கவுண்டபாளையத்தை சேர்ந்த இவர் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற தகவல் கிடைத்தது.

Nadodigal Actor Gopal Passes Away Heart Attack

இவரது சொந்த ஊரில் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இவரது மறைவு தமிழ்சினிமாவிற்கு ஒரு இழப்பு என்று ரசிகர்களும் திரைபிரபலங்களும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்துவருகின்றனர்.இவரது ஆத்மா சாந்தி அடைய கலாட்டா சார்பாக அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.