பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா.இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

Nachiyarpuram Rachitha leaves Chennai due to Corona scare

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது கணவர் தினேஷுடன் இணைந்து ரச்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Nachiyarpuram Rachitha leaves Chennai due to Corona scare

விறுவிறுப்பாக நகர்ந்து வந்த இந்த தொடரின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.சில மாதங்களுக்கு பிறகு இந்த தொடரின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.இந்த சீரியலின் ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது என்று ரச்சிதா தெரிவித்தார்.இதனை தொடர்ந்து ஜூன் 19ஆம் தேதி முதல் சென்னையில் முழு ஊரடங்கு போடப்படவுள்ளதாலும்,ஷூட்டிங் இல்லாத காரணத்தாலும் ரச்சிதா ஊருக்குகிளம்புவதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.