ரசிகர்களின் ரசனையை அறிந்து கலக்கலான காமெடி கலந்த கமர்ஷியல் படங்களை உருவாக்குவதில் வல்லவர் சுந்தர் சி.இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும்,தயாரிப்பாளர்கவும் தனது முத்திரையை பதித்துள்ளார் சுந்தர் சி.மீசைய முறுக்கு,நட்பே துணை என்று சூப்பர்ஹிட் படங்களை தயாரித்துள்ளார் சுந்தர் சி.

கன்னடத்தில் வெளியாகி செம ஹிட் அடித்த திரைப்படம் மாயா பஜார்.இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர் சி கைப்பற்றியிருந்தார்.கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாலும்,OTT தளங்களில் படங்கள் வெளியாவதாலும் ரசிகர்கள் தங்கள் கவனத்தை OTT பக்கம் திருப்ப தொடங்கினர்.இதனை கவனித்த சன் டிவி நிறுவனம் , நேரடியாக படம் ஒன்றை டிவியில் ஒளிபரப்ப திட்டமிட்டனர்.

சுந்தர் சியின் இந்த மாயா பஜார் ரீமேக் படத்தை சன் டிவியில் தீபாவளி அன்று ஒளிபரப்ப தயாராகினர்.இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.பிரசன்னா,யோகி பாபு,ஷியாம்,அஸ்வின் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.நாங்க ரொம்ப பிஸி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் நவம்பர் 14ஆம் தேதி காலை 11 மணிக்கு சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாங்க ரொம்ப பிஸி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தை நேரடியாக டிவியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்