இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Naan Sirithal Second Single To Release On Youtube

இந்த இரண்டு படங்களையுமே இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்குகிறார்.ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

Naan Sirithal Second Single To Release On Youtube

நான் சிரித்தால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினையும் இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கிறார்.இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடல் டிசம்பர் 21ஆம் தேதி கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இந்த பாடல் சில காரணங்களால் யூடூப்பில் மட்டும் வெளியாகும் கல்லூரி நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.