நான் சிரிச்சா வேற லெவல் வீடியோ பாடல் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | March 17, 2020 17:59 PM IST

இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த நான் சிரித்தால் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்கி இருந்தார்.ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.சுந்தர் சி இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் நான் சிரிச்சா வேற லெவல் என்ற பாடலின் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்