இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Naan Sirithal Distribution Rights Sold To Rockfort

இந்த இரண்டு படங்களையுமே இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கும் நான் சிரித்தால் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்கியுள்ளார்.ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்

Naan Sirithal Distribution Rights Sold To Rockfort

இந்த படத்தினையும் இயக்குனர் சுந்தர் சி தயாரித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் விநியோக உரிமையை ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த மீசைய முறுக்கு,நட்பே துணை உள்ளிட்ட படங்களையும் இந்த நிறுவனம் தான் விநியோகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.