இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Naan Sirithal Digital Premiere On Zee5 Apr 7th

இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த நான் சிரித்தால் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்கி இருந்தார்.ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.சுந்தர் சி இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Naan Sirithal Digital Premiere On Zee5 Apr 7th

இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜீ தமிழ் குழுவினர் வாங்கியுள்ளனர்.தற்போது இந்த படம் நாளை முதல் ஜீ-5வில் ஒளிபரப்பப்படும் என்ற அறிவிப்பை ஜீ தமிழ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.