மீசைய முறுக்கு, நட்பே துணை போன்ற வெற்றி படங்களுக்கு பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து வரும் படம் நான் சிரித்தால். இந்த படத்தை அவ்னி சினிமேக்ஸ் சார்பில் இயக்குனர் சுந்தர்.சி தயாரித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் ராணா இயக்கியுள்ளார். 

naansirithal

இவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது சிறப்பு தகவல். இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக தமிழ் படம் 2 புகழ் ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார்.

naansirithal

படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படத்திலிருந்து பிரேக்கப் பாடல், தோம் தோம் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ஈர்த்து வருகிறது. தற்போது படத்தின் ட்ரைலர் இம்மாதம் ஜனவரி 2020 முதல் வாரத்தில் வெளியாகும் என்ற தகவல் கலாட்டா செவிகளுக்கு எட்டியது.