விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.மிர்ச்சி செந்தில் இந்த தொடரின் நாயகனாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வந்தார்.முதல் சீசன் பெரிய வெற்றியடைந்தது,இந்த தொடர் கொரோனா காரணமாக கைவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரிலும் செந்தில் இரட்டை வேடங்களில் ஹீரோவாக கலக்கி வருகிறார்.மோனிஷா இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.ப்ரேமி வெங்கட்,சபிதா வெங்கட்,காயத்ரி யுவராஜ்,ஜனனி அசோக் கும்மர்,வைஷ்ணவி என பல நட்சித்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.

பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் இந்த தொடர் 450 எபிசோடுககளை கடந்து வெற்றிகரமாக சென்று வருகிறது.கதையின் விறுவிறுப்பை கூட்டும் வகையில் இந்த தொடரில் இரண்டாவது ஹீரோயினாக செந்திலுக்கு ஜோடியாக VJ பவித்ரா சில மாதங்களுக்கு முன் இணைந்தார்.

விஜய் டிவியின் முக்கிய தொடராக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் இந்த வாரத்துடன் நிறைவடைந்துள்ளது.பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரை மிஸ் செய்வோம் என ரசிகர்கள் வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.