நாம் இருவர் நமக்கு இருவர் 2-வின் முதல் ப்ரோமோ வெளியீடு !
By Aravind Selvam | Galatta | July 24, 2020 18:50 PM IST

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.இந்த தொடரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்திருந்தார்.தனது மனைவி ஸ்ரீஜாவுடன் நடித்த இந்த தொடரும் பெரிய வெற்றியை பெற்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் முக்கிய வேடங்களில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.
கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து ஷூட்டிங்குகள் தொடங்கின.ஆனால் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் ஹீரோயின்கள் மாற்றப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.இதனை பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரக்ஷா உறுதி செய்தார்.இந்த தொடரில் நட்சத்திரங்களை ஒன்றுதிரட்டமுடியாததால் இந்த தொடரை அப்படியே முடித்துக்கொண்டு ,புதிய கதை கொண்டு அடுத்த சீசன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளனர் என்ற தகவல் தனக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து யாரும் தன்னிடம் எந்த ஒரு அறிவிப்பும் அளிக்காதது தனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.ராஷ்மியும் இந்த புதிய தொடரில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனிலும் செந்தில் ஹீரோவாக டபிள் ஆக்ஷன் வேடத்தில் நடிக்கிறார் என்றும்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா இதில் ஹீரோயினாக நடிக்கிறார் என்பதும் தெரியவந்தது.இது குறித்த அறிவிப்பை சில நாட்களுக்கு முன் விஜய் டிவி வெளியிட்டது.புதிய கதைக்களத்துடன் தொடங்கும் இந்த தொடரின் முதல் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.விறுவிறுப்பான இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த தொடரின் ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Sema treat for Dhanush fans - Vera Level Update on D's next!
24/07/2020 07:00 PM
Gautham Menon's Ondraga new film release | Sanchana Natarajan | Break Free
24/07/2020 06:41 PM
MASSIVE: Sivakarthikeyan's film enters 500 million club!
24/07/2020 06:23 PM
One more young actor joins Rajinikanth's Annaatthe - check out!
24/07/2020 05:26 PM